search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணம் திருட்டு"

    • திருநகரில் மோட்டார் சைக்கிளில் இருந்து ரூ.1.30 லட்சம் திருட்டு போனது.
    • முதியவரிடம் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

    திருப்பரங்குன்றம்

    திருமங்கலம் சொக்க நாதன் பட்டி கப்பலூர் நடுத்தெருவை சேர்ந்தவர் பவுன்ராஜ் (63). இவர் திருநகர் சீதாலட்சுமி மில் கேட் அருகே உள்ள ஒரு ஜூஸ் கடைக்குச் சென்றார். அப்போது அவர் பையில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்தை மோட்டார் சைக்கிளில் வைத்து விட்டு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த பணம் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் காணாமல் போயிருந்தது. பணத்தை மோட்டார் சைக்கிளில் வைத்ததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அவர் கடைக்கு சென்று திரும்பிய சிறிது நேரத்திற்குள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து பவுன்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் திருநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பஸ் நிலையத்தில் நேற்று மாலை நின்று கொண்டிருந்தார்.
    • கீழ்குப்பம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள செம்பாகுறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 44). இவர் சொந்த வேலை காரணமாக வெளியூருக்கு செல்ல செம்பாக்குறிச்சி பஸ் நிலையத்தில் நேற்று மாலை நின்று கொண்டிருந்தார்.பஸ் நிலையத்தில் அய்யப்பன் அருகே நின்று கொண்டிருந்த 2 வாலிபர்கள் அய்யப்பனின் பின் பாக்கெட்டில் இருந்த ரூ.600 பணத்தை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்ப முயன்றனர். அப்போது, அய்யப்பன் கூச்சலிடவே, அங்கிருந்தவர்கள், தப்பியோடிய 2 வாலிபர்களையும் மடக்கி பிடித்தனர். அந்த வாலிபர்களுக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள், பணத்தை பறிமுதல் செய்து அய்யப்பனிடம் கொடுத்தனர்.

    மேலும், 2 வாலிபர்களையும் கீழ்குப்பம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசாரின் விசாரணையில் கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள காட்டுமயிலூர் கிராமத்தைச் சேர்ந்த அரசு (வயது 35), பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா வெண்பாவூர் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் (22) என்பதும் தெரியவந்தது.அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • கண்ணன் ஒரு வாரத்துக்குப் பின்னர் பணத்தை பார்த்தபோது அங்கு பணம் இல்லை.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தபோது சிவபெருமான் பணத்தை திருடி சென்றிருப்பது தெரியவந்தது.

    திருப்பூர்:

    திருப்பூர் புதுப்பாளையத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 39). கடந்த சில வருடங்களாக மேற்கு ஆப்பிரிக்காவில் வேலை செய்து வந்தார். கடந்த மாதம் திருப்பூர் வந்த இவர் தாய் பாப்பம்மாளுடன் வசித்து வந்தார்.

    இந்தநிலையில் கண்ணன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இவரை மருத்துவமனை உள்ளிட்ட இடங்களுக்கு அதே பகுதியை சேர்ந்த நண்பர் சிவபெருமான் (41) அழைத்துச்சென்று வந்தார். சிவபெருமான் தறி தொழிலாளியாக உள்ளார் . கடந்த சில நாட்களுக்கு முன்பு அருப்புக்கோட்டையில் உள்ள வீட்டை புதுப்பிப்பது குறித்து தாயும், மகனும் பேசினர்.

    இதற்காக தான் வெளிநாட்டில் வேலை செய்தபோது அனுப்பிய பணம் மற்றும் அக்கம்பக்கத்தில் கொடுத்து வைத்திருந்த பணம் என ரூ.3 லட்சத்து 50 ஆயிரத்தை சேகரித்து வீட்டில் வைத்திருந்தனர்.

    இதனை தெரிந்துகொண்ட சிவபெருமான் யாருக்கும் சந்தேகம் வராதபடி பகல் நேரங்களிலேயே வீட்டிற்குள் சென்று கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை திருடி சென்று உள்ளார். இந்த நிலையில் கண்ணன் ஒரு வாரத்துக்குப் பின்னர் பணத்தை பார்த்தபோது அங்கு பணம் இல்லை. அதிர்ச்சி அடைந்த அவர் திருமுருகன்பூண்டி போலீசில் புகார் செய்தார் .

    போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தபோது சிவபெருமான் பணத்தை திருடி சென்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 75 ஆயிரம் பணத்தை மட்டும் பறிமுதல் செய்தனர். மீதமுள்ள பணத்தை தான் வாங்கிய கடனை அடைத்துள்ளதுடன், நண்பர்களுக்கு மது வாங்கி கொடுத்தும் வெளியிடங்களுக்கு சென்றும் உல்லாசமாக இருந்து செலவழித்துள்ளார். சிவபெருமானை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • பத்திரம், சான்றிதழ்கள் எரிப்பு
    • வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டுள்ளதாக பக்கத்தில் உள்ளவர்கள் தெரிவித்தனர்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாதுமலை புங்கம்பட்டு நாடு ஊராட்சி கண்ட கள்ளவூர் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 40), லாரி கிளீனர்.

    இவரது மனைவி நாச்சி (35). இவர்களுக்கும், அதே பகுதியை சேர்ந்த ராம சாமி, அவரது மகன் முருகன் (40) என்பவருக்கும் வரப்பு தகராறு ஏற்பட்டதில் ராம சாமி காயமடைந்து திருப்பத் தூர் அரசு மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வருகி றார்.

    அவர் கொடுத்த புகாரின் பேரில் பெருமாளை போலீ சார் தாலுகா போலீஸ் நிலை யத்துக்கு அழைத்துள்ளனர். அதன்படி பெருமாள் மற்றும் அவரது மனைவி நாச்சி கடந்த 30-ந்தேதி வீட்டை பூட் டிக்கொண்டு திருப்பத்தூர் வந்துள்ளனர்.

    பின்னர் அங்கு அவரது உறவினர் பெருமாள் என்பவர் விட்டில் தங்கி விட்டு, போலீசாக தேர்வு பெற்று வேலூரில் பயிற்சியில் உள்ள மகளை பார்க்க நேற்று வேலூர் சென்றுள்ளனர்.

    இந்த நிலையில் இவர்களுடைய வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டுள்ளதாக பக்கத்தில் உள்ளவர்கள் தெரிவித்தனர். அதன்பேரில் உடனடியாக பெருமாள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, பீரோ உடைக் கப்பட்டு அதில் இருந்த வீடு மற்றும் நில பத்திரங்கள், மகள், மகன் பள்ளி சான்றிதழ்கள் எரிக்கப்பட்டிருந்தது.

    மேலும் பீரோவில் இருந்த 32 பவுன் நகை, ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் திருட்டு போய் இருந்தது. இதுகுறித்து திருப் பத்தூர் தாலுகா போலீசில் பெருமாள் உறவினர்கள் புகார் அளித்தார். அதன்பேரில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்விரோ தம் காரணமாக இந்த சம்பவம் நடந்ததா அல்லது வேறு யாராவது செய்தார்களா என விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருட்டு போன நகைகளின் மதிப்பு சுமார் ரூ.13 லட்சத்து 50 ஆயிரம் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    • கோவில் உண்டியல் உடைத்து பணம் திருடப்பட்டது.
    • சப்- இன்ஸ்பெக்டர் கணபதி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் சங்கரன் கோவில் அருகே உள்ள ஐ.என்.டி. யு.சி. நகரில் சிங்கத்து இருளப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று இரவு பூசாரி மாரியப்பன் பூஜை களை முடித்துவிட்டு இரவு கோவில் கதவை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். இந்த நிலையில் இன்று காலை மாரியப்பன் பூஜைக்காக கோவில் கதவை திறப்பதற்காக வந்தார்.

    அப்போது கோவில் கதவு உடைத்து அங்கிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப் பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தன்னார்வ பொறுப்பு தக்கார் ராஜா விற்கு, மாரியப்பன் தகவல் கொடுத்தார். அதன் பேரில் தெற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சார்லஸ், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் கணபதி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கனகராஜ் தனது வீட்டில் நடந்த திருட்டு குறித்து ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
    • குருவம்மாளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சம்மந்தாபுரம் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ். டாக்டரான இவர் தனது வீட்டின் கீழ் தளத்தில் கிளினிக் நடத்தி வருகிறார். இவர் வீட்டில் உள்ள ஒரு அறையின் அலமாரியில் சீட்டு பணம் ரூ.6 லட்சத்தை வைத்து பூட்டி, அதன் சாவியை மேலே வைத்திருந்தார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் அந்த பணத்தை எடுக்க அலமாரியை திறந்தார். அப்போது அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.6லட்சம் பணத்தை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த டாக்டர் கனகராஜ் தனது குடும்பத்தினர் மற்றும் கிளினிக்கில் வேலை பார்ப்பவர்களிடம் விசாரித்தார்.

    ஆனால் யாரும் பணத்தை எடுக்கவில்லை என்று கூறினர். இதையடுத்து டாக்டர் கனகராஜ் தனது வீட்டில் நடந்த திருட்டு குறித்து ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டாக்டர் கனகராஜ் தனது புகாரில், தன்னுடைய வீட்டில் வேலைக்கார பெண்ணாக பணிபுரியும் அழகாபுரி தொட்டிய பட்டிைய சேர்ந்த மாரியப்பன் என்பவரின் மனைவி குருவம்மாள் (வயது60) பணத்தை திருடியிருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார்.

    இதனால் குருவம்மாளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கதிர்வேல் தனது மனைவி ஜெயலட்சுமி மற்றும் குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டி ருந்தார்.
    • கதிர்வேல் கீழே இறங்கி வந்து பார்த்தபோது மர்ம நபர் ஒருவர் கதவின் அருகே நின்று கொண்டு இருப்பது தெரிய வந்தது.

    கள்ளக்குறிச்சி: 

    தியாகதுருகம் அருகே வேங்கைவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 34) விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் மேல் மாடியில் தனது மனைவி ஜெயலட்சுமி மற்றும் குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டி ருந்தார். அப்போது கீழ் வீட்டில் உள்ள அறை யில் கதிர்வேல் அண்ணன் பெருமாள் மனைவி கவிதா தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு பூட்டப்ப டாமல் சாத்தியிருந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் நள்ளிரவில் வீட்டில் கதவை உடைப்பது போல் சத்தம் கேட்டதால் சந்தேகம் அடைந்த கதிர்வேல் கீழே இறங்கி வந்து பார்த்தபோது மர்ம நபர் ஒருவர் கதவின் அருகே நின்று கொண்டு இருப்பது தெரிய வந்தது. இவரைப் பார்த்த கதிர்வேல் கூச்சலிட்டார். அவரது கூச்சல் சத்தம் கேட்டு மர்ம நபர்கள் 2 பேர் வீட்டில் இருந்து தப்பி ஓடினர். உள்ளே சென்று பார்த்த போது கவிதா படுத்திருந்த அறையை வெளிப்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுவிட்டு மற்றொரு அறையில் இருந்த பீரோ கதவை உடைத்து அதிலிருந்த ரூ.40 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

    இது குறித்து தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், வரஞ்சரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் குண சேகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்த னர். மேலும் கைரேகை நிபுணர் ராஜவேல் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தடயங்களை சேகரித்தார். இது குறித்து கதிர்வேல் கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய 2 பேரை தேடி வருகின்றனர். மர்ம நபர்கள் வீட்டின் உள்ளே புகுந்து பீரோவை உடைத்து பணத்தை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மின்வாரிய ஊழியர் அருள்குமார், மற்றும் மாரியப்பன் ஆகியோர் வீடுகளில் ஒரே நாளில் நகை, பணம் கொள்ளை போனது.
    • கொள்ளையர்களை கைது செய்ய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அடுத்த திம்மசமுத்திரம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பூட்டி கிடந்த மின்வாரிய ஊழியர் அருள்குமார், மற்றும் மாரியப்பன் ஆகியோர் வீடுகளில் ஒரே நாளில் நகை, பணம் கொள்ளை போனது.

    இதுகுறித்து பாலு செட்டிசத்திரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போது விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளில் கொள்ளையர்கள் 2 பேரும் தப்பி செல்வது பதிவாகி உள்ளது. இதனை வைத்து கொள்ளையர்களை கைது செய்ய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஒரு வருடத்திற்கு முன்பு புதிதாக கட்டி முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • கோவிலை பூசாரி திறந்து பார்த்தபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே கொத்தகோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு புதிதாக கட்டி முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இந்த கோவிலில் சனிக்கிழமை தோறும் பெருமாளுக்கு சிறப்பு பூஜை நடைபெறும். எனவே, சுற்று வட்டார கிராம மக்கள் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்துவிட்டு செல்வார்கள். இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் கோவிலை பூசாரி பூட்டி விட்டு சென்றுவிட்டார். இன்று காலை கோவிலை பூசாரி திறந்து பார்த்தபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    அப்போது அவர் உள்ளே சென்று பார்த்தபோது கோவிலில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்து நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. கோவிலின்

    • மோட்டார் சைக்கிளின் பெட்டி உடைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த ரூ.1 லட்சம் பணம் மற்றும் ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் மோகன்தாஸ். இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் ஐஸ் ஹவுஸ் பகுதிக்கு வந்தார். அவரது மோட்டார் சைக்கிள் பெட்டியில் ரூ.1 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் சில ஆவணங்கள் இருந்தன.

    ஐஸ் ஹவுஸ் நடேசன் சாலையில் காய்கறி கடை ஒன்றின் அருகில் மோகன்தாஸ் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அருகில் சென்று விட்டு திரும்பினார். அப்போது மோட்டார் சைக்கிளின் பெட்டி உடைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த ரூ.1 லட்சம் பணம் மற்றும் ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.

    மோகன்தாசை யாரோ நோட்டமிட்டு கைவரிசை காட்டி இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்கள் யார் என்பது தெரியவில்லை. இது தொடர்பாக மோகன்தாஸ் ஐஸ் ஹவுஸ் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அப்பகுதியில் உள்ள கேமரா காட்சிகளை வைத்து போலீசார் பணத்தை கொள்ளையடித்தது யார் என்பது பற்றி விசாரித்து வருகிறார்கள்.

    • கைரேகை சி.சி.டி.வி. கேமரா காட்சிகள் கிடைக்காததால் கொள்ளையர்களைப் பிடிக்க முடியாமல் போலீசார் திணறல்
    • நிதி நிறுவனத்தில் இருந்த 3½ கிலோ நகைகள் தப்பியுள்ளது

    நாகர்கோவில் :

    ராஜாக்கமங்கலம் கணபதிபுரம் தெக்கூர் பகுதியைச் சேர்ந்தவர் பூதலிங்கம். இவரது மகன் முருகன் தொழிலதிபர்.இவர் வீட்டில் வளாகத்தில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்.

    இவரது ஒரு மகன் சென்னையிலும் மற்றொரு மகனும் மகளும் வெளி நாட்டிலும் படித்து வரு கிறார்கள்.சென்னையில் படித்து வரும் மகனை பார்ப்பதற்காக முருகன் மனைவியுடன் சென்றி ருந்தார். அப்போது முருகனின் தந்தை பூதலிங்கம் மகனின் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு மற்றும் நிதி நிறுவனத்தின் ஷட்டர் உடைக்கப்பட்டு இருந்தது.

    இது குறித்து ராஜாக்க மங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி னார்கள்.கொள்ளையர்கள் வீடு முழுவதும் மிளகாய் பொடியை தூவி கைவரிசை காட்டி இருந்தனர். 53 பவுன் நகை மற்றும் ரூ. 6 லட்சத்து 20 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றிருந்தனர். இதுகுறித்து முருகன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரு கிறார்கள். கொள்ளையர்களைப் பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட் டுள்ளது. தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    முருகன் வீட்டில் இல்லா ததை நோட்டமிட்டு கொள்ளையர்கள் கைவரிசை காட்டி உள்ளனர். எனவே உள்ளூர் கொள்ளையர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். மேலும் அந்த பகுதியில் வேலை பார்க்கும் வட மாநிலத்தைச் சேர்ந்த வர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட னர்.

    இது தொடர்பாக போலீசார் வட மாநில தொழி லாளர்கள் 20 பேரிடம் விசாரணை நடத்தினர். மேலும் அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா வின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

    அப்போது கேமராவில் கொள்ளையர்கள் வந்த காட்சிகள் எதுவும் பதிவாக வில்லை. எனவே கொள்ளை யர்கள் முருகனின் வீட்டின் பின்பகுதி வழியாக புகுந்து இருக்கலாம் என்று கருது கிறார்கள். எனவே பின்ப குதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.

    சி.சி.டி.வி. கேமராவில் காட்சிகள் எதுவும் சிக்காத நிலையில் கைரேகையும் கிடைக்காததால் போலீ சாருக்கு குற்ற வாளிகளை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனினும் தனிப்படை போலீசார் கொள்ளையர்களை கைது செய்ய அடுத்த கட்ட நடவ டிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    கொள்ளையர்கள் முருகனின் வீட்டில் இருந்த நகையை எடுத்துச் சென்ற நிலையில் அவரது நிதி நிறுவனத்தில் இருந்த 3½ கிலோ நகைகள் தப்பியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

    • ஆஸ்பத்திரிக்கு சென்று சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது காரின் பின் இருக்கையில் வைக்கப்பட்டிருந்த ரூ. 13 லட்சம் பணம் காணாமல் போயிருந்தது.
    • போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னை வளசரவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ். அ.தி.மு.க. பிரமுகரான இவர் நேற்று இரவு தனது நண்பர்களான அபிஷேக் ஜேக்கப், யாசின் ஆகியோருடன் சேத்துப்பட்டுக்கு காரில் புறப்பட்டார். யாசினின் காரில் 3 பேரும் வந்தனர். காரில் சதீசின் பணம் ரூ. 13 லட்சம் இருந்தது.

    சேத்துப்பட்டில் உள்ள ஆஸ்பத்திரியில் நண்பர் ஒருவருக்கு பிறந்த குழந்தையை பார்ப்பதற்காகவே 3 பேரும் ஒன்றாக காரில் வந்தனர்.

    இந்த நிலையில் தனது பணத்தை நாளை வாங்கி கொள்கிறேன் என கூறி விட்டு சதீஷ் வளசரவாக்கத்தில் இறங்கி விட்டார்.

    இதைத் தொடர்ந்து மற்ற இருவரும் சேத்துப்பட்டு மெக்கானிக்கல் சாலையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்று காரை வெளியில் நிறுத்தி விட்டு உள்ளே சென்றனர்.

    சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது காரின் பின் இருக்கையில் வைக்கப்பட்டிருந்த ரூ. 13 லட்சம் பணம் காணாமல் போயிருந்தது. அதனை யாரோ திருடிச் சென்றுள்ளனர்.

    இதுபற்றி சேத்துப்பட்டு போலீசில் புகாார் அளிக்கபட்டுள்ளது. போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×